Menu Close

பார்வையற்றோருக்கான முதியோர் இல்லம்

பார்வையற்றோர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இளமைக் காலத்தில் பிழைப்பிற்காக ஏதோ ஒரு வேலை செய்து வாழ்க்கையை நகர்த்தி வந்தார்கள். வயது முதிர்ந்ததும் நடமாட முடிவதில்லை. வறுமையின் காரனமாக உடல் நலவிற்று யாருடைய ஆதரவும் இன்றி அடிப்டைத் தேவைகளுக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பார்வையற்றோர்களுக்கு குடும்ப ஆதரவும் கடைப்பதில்லை. சமூக புறக்கணிப்பு வருவாய் இன்மை. வயது முதிர்வு அனைத்தும் ஒன்று சேர்ந்து மிகவும் அவதி உருகிறார்கள். பொதுவான முதியோர் இல்லங்களால் பார்வை அற்ற முதியவர்கள் சேர முடிவதில்லை. எனவே பார்வையற்ற முதியவர்களை மிகச் சரியாக புரிந்து கொண்டு அவர்களுக்கென்று சிறப்பான இடத்தில் தங்க வைத்து ஆதரித்து அரவணைக்க வேண்டியுள்ளது. அன்புக் காட்டுவதற்கு ஆதரித்து அரவணைப்பதற்கு இன்றைய வணிக மயமான சமூகத்தில் கைவிடப்பட்ட பார்வையற்ற முதியவர்களை கருணை உள்ளத்தோடு தனியாய சிறப்புக் காப்பகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.
பார்வை அற்றவர்களின் தேவைகள், அவர்களின் வெளிப்பாடுகளை எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நபர்களால் மட்டுமே ஆதரித்து எனவே அரவணைக்க முடியும். பார்வையற்றோருக்கான முதியரேர் சிறப்புக் காப்பகம் தனியாக நடத்தப்பட வேண்டியது இன்றியமையாதத் தேவையாசு இருக்கிறது.

கருணையும் தாராள மனமும் உள்ள நன்கொடையாளர்கள் தாராளமான பங்களிப்புகளை வழங்குவதன் மூலம் எங்களின் எளிமையான முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.